108
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 73-வது சுதந்திர தின விழா இன்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் S.M.A. அக்பர் ஹாஜியார் தேசியக்கொடி ஏற்றினார். கடற்கரைத் தெரு முஹல்லா ஜமாத் நிர்வாகிகள், முஹல்லாவாசிகள் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ மாணவிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் வேடமணிந்து விழாவில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.