தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக போலீசாருக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர பகுதிகள் வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.