54
நாகப்பட்டினம் அருகில் ஐவநல்லூரில் குடி மாரமத்து பணியின் கீழ் 40 ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரப்பட்டுள்ளது.
இன்று அதை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பார்வையிட்டார்.
குளக்கரையை சுற்றிலும் மரங்களை நடுமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒரு பெரும் முயற்சிக்கு தூண்டுகோலாக இருந்ததற்காக அவ்வூர் மக்கள் MLA அவர்களுக்கு நன்றி பாராட்டினர்.
பிறகு மஞ்சச்கொல்லைக்கு வருகை தந்த MLA விடம், முதலியார் தெருவில் உள்ள இடும்பன் கோயில் மற்றும் குமரன் கோயில் அருகில் மின் விளக்குகள் தருமாறு அப்பகுதி மக்கள் கேட்டனர்.
BDO விடம் இது விஷயமாக அலைப்பேசியில் கூறி விட்டு, பக்தர்களின் வசதிக்காக ஒரு வாரத்திற்குள் அது நிறைவேற்றி தரப்படும் என்றும் கூறினார். அவர்கள் இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.