Home » ஒரே நாளில் மவுசு கூடிய இந்திய ரூபாய்!

ஒரே நாளில் மவுசு கூடிய இந்திய ரூபாய்!

0 comment

முந்தைய நாளில் ஒரு டாலருக்கு 72.02 ரூபாய் என முடிந்திருந்த நிலையில், நாளின் முடிவில் 71.48 ரூபாயாக நிலை பெற்றது. மார்ச் 18, 2019 க்குப் பின் இந்திய ரூபாய்க்கு ஒரே நாளில் 54 காசுகள் மதிப்பு கூடியிருக்கிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடந்த ஐந்து மாதங்களில் அதிகபட்ச மதிப்பை செவ்வாய்க்கிழமை எட்டியது.
திங்கட்கிழமை அமெரிக்கட டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசுகளை இழந்து ஒன்பது மாதங்களில் குறைவான மதிப்புக்கு சரிந்தது. செவ்வாய்க்கிழமை நாளின் தொடக்கத்திலேயே ரூபாய மதிப்பு அதிகரித்தது. முந்தைய நாளில் ஒரு டாலருக்கு 72.02 ரூபாய் என முடிந்திருந்த நிலையில், 32 காசுகள் மதிப்பு கூடி 71.70 ரூபாயாக உயர்ந்தது. அதிகபட்சம் 71.45 ரூபாய் வரை சென்ற இந்திய ரூபாய் மதிப்பு நாளின் முடிவில் 71.48 ரூபாயாக நிலை பெற்றது. இது கடந்த ஐந்து மாதங்களில் இந்திய ரூபாய்க்குக் கிடைத்துள்ள அதிகபட்ச மதிப்பாகும். மார்ச் 18, 2019 க்குப் பின் இந்திய ரூபாய்க்கு ஒரே நாளில் 54 காசுகள் மதிப்பு கூடியிருக்கிறது. சீன யுவானைப் பொருத்தவரை ஏற்கெனவே 11 ஆண்டுகளில் மோசமான சரிவை அடைந்து, மேலும் வீழ்ச்சியே சந்தித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியை அளிப்பதாக அறிவித்திருப்பது ரூபாய் மதிப்பு உயர ஒரு காரணமாக இருந்தது. பங்குச்சந்தையிலும் இந்த அறிவிப்பின் தாக்கம் காரணமாக ஏற்றம் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொருளாதார அறிவிப்புகள் திங்கட்கிழமை சந்தையிலும் லாபகரமான போக்கு உறுதிசெய்தது. வர்த்தகத்தின் முதல் நாளிலேயே ஆர்பிஐ அறிவிப்பு வந்ததால், செவ்வாயும் வர்த்தகம் வளர்ச்சி கண்டது

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter