Home » பட்டுக்கோட்டையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சி!!

பட்டுக்கோட்டையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சி!!

0 comment

பட்டுக்கோட்டை புதிய வீட்டு வசதி வாரியம் பொன்னவராயன்கோட்டை நகரை சேர்ந்த ஆனந்த் சித்திரவள்ளி இவர்களது மகன் 9 வயது ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆசிய்வ் இரண்டு கண்களை கட்டிக்கொண்டு நகர் முக்கிய வீதியில் சைக்கிள் ஓட்டும் சாதனை முயற்சி இன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் ஜெய வீர பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார், காவல்துறை துணை ஆணையர் ஓய்வு சிவ பாஸ்கர், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நல்லதம்பி முன்னிலை வகித்தனர்

மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபால் அவர்கள் தலைமை தாங்கினார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
.இவர்களுடன் மனோரா ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம், பட்டுக்கோட்டை லயன்ஸ் கிளப், லயன்ஸ் கிளப் ஆப் குயின் சிட்டி, லயன்ஸ் கிளப் ஆஃப் சில்க் சிட்டி, பட்டுக்கோட்டை ஜெசிஸ், தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம், பட்டுக்கோட்டை நடைபயிற்சி யாளர்கள் சங்கம், இந்திய மருத்துவ கழகம்,தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம், பொறியாளர்கள் சங்கம், நண்பர்கள் மனிதநேயம் மன்றம், பெரியார் உடற்பயிற்சி மையம், அணைக்காடு சிலம்பாட்ட கூடம், சாய் நிகில் அகாடமி ஸ்கேட்டிங் மாணவர்கள், கலாம் நண்பர்கள், பட்டுக்கோட்டை கால்பந்தாட்ட கழகம், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கு கொண்டனர்.

பேருந்து நிலையத்தில் புறப்பட்ட சாதனை மணிக்கூண்டு காந்திசிலை அண்ணாசிலை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை வழியாக வந்து மணி கூண்டில் நிறைவு பெற்றது. 2.600 கிலோ மீட்டர் தூரத்தை17 நிமிடம்11 நொடிகளில் கடந்து சென்றார். நிறைவாக முன்னால் உடற்கல்வி இயக்குனர் D. ரவிச்சந்தர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter