பரோலில் இன்று வெளியே வருவதாக கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் கூறியதாவது: சசிகலா பரோலில் வெளியே வர கர்நாடகாவின் உள்துறை, சட்டத்துறை, சிறைத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் பேரில் சசிகலா இன்று சிறையில் இருந்து வெளியே வருவார். சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் எளிமையான தண்டனை மட்டுமே வழங்கி உள்ளது. கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி 6 மாதம் சசிகலா தண்டனை அனுபவித்துள்ளார். அவரது ரத்த உறவான கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் பரோல் வழங்கப்பட்டுள்ளது. எவ்வித பெரிதான நிபந்தனையும் இல்லாமல் சசிகலா இன்று வெளியே வருவார். அனுமதிக்கப்பட்ட இடத்தில் தங்கி இருந்து நடராஜனை சந்திப்பார். இதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்றார்.