95
பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பரோலில் வெளியில் செல்லும் நாட்களில் ஊடகங்களை சந்திக்க கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை வரும் சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை சந்திக்க உள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.