96
அதிரையில் தினந்தோறும் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் அதிரை பேரூராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் ஊரில் இருக்கும் குப்பைக் கூளங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்றுயை தினம் வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துப்பரவு பணியாளர்கள் Cmp லைனில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஹனீஃப் பள்ளிக்கு அருகாமையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக வைக்கப்பட்டிருக்கும் குப்பை கூண்டு அருகில் இரு புறமும் செங்கற்களை சம்பந்தப்பட்ட யாரோ ஒருவர் தனது சுயநல தேவைக்காக அடுக்கி வைத்திருக்கின்றார். இதனால் குப்பைக் கூண்டுகளில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்க்கு துப்புரவு பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
செங்கற்கள் நடுவே இருந்த குப்பை கூண்டுகளை வெளியே நடு ரோட்டில் இழுத்து குப்பைகளை அள்ளும் அவலநிலையும், இதனால் குப்பை கூண்டுகள் உடைந்து போகும் வாய்ப்பும் இருக்கிறது.
தூர்நாற்றம் வீசும் குப்பைகள் வீதியில் சிதறிக் கிடந்தாலோ அல்லது கழிவு நீர் கால்வாய் வீதியில் தேங்கி நின்றாலோ மூக்கை பொத்தி முகம் சுழித்துக் கொண்டு செல்லும் நாம் நமது சுயநலத்தால் தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபடும் இந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிரமமும் இடையூறுகளும் தர வேண்டாமே..
ஹனீஃப் பள்ளி அருகே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த செங்கற்களை சம்பந்தப்பட்டவர்கள் சுயநலமின்றி அகற்றி பிறர் நலம் நாட வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட Cmp லைன் பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.