47
அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன வழக்கில் யுஜிசி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த நான்கு நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.
இவ்வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கல்லூரி நிர்வாகம் புதிய உதவிப் பேராசிரியர்களை பணியில் அமர்த்த முயற்சிப்பதை அதிரை நகர தமுமுக வண்மையாக கண்டித்துள்ளதோடு, வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதை மீறி புதிய உதவிப் பேராசிரியர்களை பணியில் அமர்த்தினால் கல்லூரி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது.