Home » ட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க ஹேஷ்டேக் !

ட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க ஹேஷ்டேக் !

0 comment

நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இன்று ஹிந்தி தினம் கொண்டாடப்படும் நிலையில் அமித் ஷா, நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளார்.

அதில் நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால், இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

அமித் ஷாவின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஹிந்தி திணிப்பு தொடர்பாக பல்வேறு வாதங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், #StopHindiImposition, #StopHindiImperialism போன்ற ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன. ஹிந்தி திணிப்புக்கு எதிரான கருத்துக்களை இணையவாசிகள் பலரும் இந்த ஹேஷ்டேக்குகளின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter