Home » அதிரையில் ஆயுர்வேத இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!!

அதிரையில் ஆயுர்வேத இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!!

0 comment

மதுரையில் 74 ஆண்டுகால பரம்பரை ஆயுர்வேத வைத்தியசாலையான தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை, எலும்பு மற்றும் மூட்டு வலி சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை முகாமை வருகிற (18-09-2019) புதன்கிழமை அதிரை நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நடத்த உள்ளது. இந்த ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் பக்கவாதம், மூட்டுத் தேய்மானம், கழுத்து வலி, இரத்த அழுத்தம், மாதவிடாய் கோளாறுகள், தலைவலி, பாதம் வலி, இடுப்பு வலி, சர்க்கரை வியாதி, ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு, முடக்கு வாதம், குழந்தையின்மை,முதுகு தண்டுவட கோளறு போன்ற நோய்களுக்கு பக்க விளைவுகள் இல்லாத வகையில் மதுரை தன்வந்திரி பிரபல மருத்துவர் டாக்டர் S. தன்வந்திரி கார்த்திக்வேல் B.AM.A., M.D., FICA., PG Geriatrics  மருத்துவ குழு ஆலோசனை முகாம் வழங்க உள்ளனர்.

முன்பதிவு மற்றும் மேலதிக தகவல்களுக்கு : 93449 01728, 94442 04202  என்கிற எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter