63
அதிரை பேரூராட்சியில் ஒலிக்கப்படும் சங்கு ஓசை கடந்த பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பொரு காலங்களில் இந்த சங்கு ஓசை கட்டிட வேலை, கூலி வேலை, விவசாயம் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. அதிகாலை 6 மணிக்கும் பின்னர் 9 மணிக்கும் சிறிது சிறிது மணி நேர இடைவெளிக்கனக்கில் சங்கு ஓசை ஒழிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து ரமலான் நோன்பு காலங்களில் அதிகாலை சஹ்ர் நேரத்திலும் பின்னர் மாலை நோன்பு திறப்பு நேரங்களிலும், இயற்கை பேரிடர் போன்ற காலங்களில் ஊர் மக்களுக்கு எச்சரிக்கை ஒலி செய்ய கூடியதாகவும் இருந்தது. தற்போது இந்த சங்கு ஒலிக்கும் கருவியை சரிவர பராமரிப்பின்மையாலும், நாகரீக வளர்ச்சியின் உந்துதலாலும் இந்த சங்கு ஒலிக்கும் கருவி கேட்பாரற்று கிடக்கிறது.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சரி செய்து பழைய நடைமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து சங்கு ஓசை ஒலிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அதிரை தரப்பு மக்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த எதிர்பார்ப்பை அதிரை பேரூராட்சி நிர்வாகம் செவியேற்க்குமா அல்லது கண்டும் காணாமல் மீண்டும் உறங்குமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.