408
திமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரான கருணாநிதி கட்சியின் உறுப்பினராக தன்னை புதுப்பித்துக்கொண்டார்
திமுகவின் 15 ஆவது அமைப்பு தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து கட்சியினர் தங்களை உறுப்பினர்களாக புதுப்பித்துக்கொள்ள, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அழைப்புவிடுத்திருந்தார். இதற்கான பணிகளை மாவட்டச்செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவரான கருணாநிதி நேற்று மாலை தமது கோபாலபுரம் இல்லத்தில் அக்கட்சின் செயல்தலைவர் ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலையில் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.