Home » இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா தகவல்

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா தகவல்

0 comment

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை என நாசா அறிவித்து உள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

இந்நிலையில் நாசா 2009 ஆம் ஆண்டு அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச்சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இது விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே கடந்து சென்றது. அந்த நேரத்தில் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பவும், லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சி செய்யப்படும் எனவும் நாசா தெரிவித்தது. இந்நிலையில் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் சமிக்ஞை மூலமாகவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா கூறியுள்ளது.

நாசாவின் கிரக அறிவியல் பிரிவு பொது விவகார அலுவலர் ஜோசுவா ஏ ஹேண்டில் மின்னஞ்சலில் கூறி உள்ளதாவது:-

ஆர்பிட்டர் கேமரா (எல்.ஆர்.ஓ.சி) இலக்கு தரையிறங்கும் தளத்தைச் சுற்றி படங்களை எடுத்தது., ஆனால் லேண்டரின் சரியான இடம் தெரியவில்லை, எனவே லேண்டர் கேமரா பார்வையில் படவில்லை.செப்டம்பர் 17 அன்று விக்ரம் தரையிறங்கும் இடத்தின் மீது எல்.ஆர்.ஓ பறந்தது, உள்ளூர் சந்திர நேரம் அந்திக்கு அருகில் இருந்தபோது; பெரிய நிழல்கள் இப்பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கியது … இது [லேண்டர்] நிழலில் இருக்கலாம். அக்டோபர் 14 ஆம் தேதி எல்.ஆர்.ஓ தரையிறங்கும் அந்த தளத்தின் மீது பறக்கும், அப்போது வெளிச்சம் மிகவும் சாதகமாக இருக்கும் என கூறினார்.

சந்திரயான் -2 விக்ரம் சந்திர மேற்பரப்பில் லேண்டருக்கான இந்தியாவின் இலக்கு தளம். இந்த புகைப்படம் விக்ரமின் தரையிறங்கும் முயற்சிக்கு முன்னர் நாசா சந்திர ஆர்பிட்டரின் எல்.ஆர்.ஓ.சி கேமராவால் எடுக்கப்பட்டது.

Source: dailythanthi

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter