அதிரையில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்குப் பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தூர்நாற்றம் வீசுகிறது. இதனை கருத்தில் கொண்ட அதிரை பேரூராட்சி நிர்வாகம், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) சாரா திருமண மண்டபம் முதல் தேங்கி இருக்கும் கழிவு நீர்களை சரி செய்வதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு JCB இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது.
கழிவு நீர்களை தேங்க விடாமல் சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரி செய்யப்படாமலும், தோண்டப்பட்ட குழிகள் இன்றளவும் மூடப்படாமல் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை அதிரை பேரூராட்சி கவனத்தில் கொண்டு தோண்டப்பட்ட குழிகளை துரிதமாக மூட வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.