38
பருவமழை தொடங்கியுள்ளதால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தொட்டிகளில் சுத்தம் செய்து, மருந்து தெளிப்பது, அதிரை முழுவதும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிப்பது மற்றும் ஆங்காங்கு தேங்கி நிற்கும் மழைநீரை வடிகால் அமைத்து சரிசெய்வது போன்ற பணிகள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் ரமேஷ், மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மேற்பார்வையில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.