திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி பட்டுக்கோட்டை திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர பொறுப்பாளர் திரு, எஸ். ஆர். என். செந்தில்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர், என். ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர், எம். கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீதர், ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களின் இரயில்வே குழு தலைவரான திரு.திருச்சி என்.சிவா அவர்களை சந்தித்து திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதைக்கு தேவையான கேட்கீப்பர்களை நியமிக்கவும், காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு வண்டிகள், மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு மீட்டர்கேஜ் ஓடியது போல ரயில்களை ,வருகின்ற தீபாவளிக்கு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க கோரி கோரிக்கை மனுவை அளித்தனர்.
திருவாரூர்~காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி மனு..!
66