53
அதிரை அடுத்த பட்டுக்கோட்டை திரி ஸ்டார் திருமண மகாலில் இம்மாதம் செப்டம்பர் (28, 29 -09-2019) சனி, ஞாயிற்றுக்கிழமை அமைதியை நோக்கிய வாழ்வியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இக் கண்காட்சியில் பெண்ணுரிமை, நவீன விஞ்ஞானம், புத்தக அரங்கம், குழந்தை வளர்ப்பு, மருத்துவ முகாம், மனித படைப்பு, குடும்பவியல், மரணத்திற்குப்பின் ,கருவறைப் பயணம், தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும் குழந்தை, வியக்க வைக்கும் நவீன விஞ்ஞானம், ஆராயத் தூண்டும் ஆன்மிகம் போன்ற பல சிறப்பம்சங்களுடன் இக் கண்காட்சி நடைபெற உள்ளது. இக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் மாற்று மத நண்பர்களுக்கு திருக் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அன்பளிப்பாகவும் வழங்கப்பட உள்ளது.
குறிப்பு: இக்கண்காட்சியை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம்.