52
அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதியில் குப்பை அதிகமாக இருந்துள்ளன.
இது குறித்து பேரூர் நிர்வாக பார்வைக்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றும் பலன் இல்லாததால் சொந்த செலவில் குப்பையை அகற்றியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சேர்மன் வாடி அருகே உள்ள சிறு குப்பையை அகற்ற அப்பகுதியை சேர்ந்த சிலர் ஊழியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பையை ஒன்றுதிரட்டிய ஊழியர்கள் தீவைத்து கொலுத்தி உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என ஆதங்கப்படுகிறார் அப்பகுதி வாசி ஒருவர்