169
அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அதிரையில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறித்த ஆய்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த ஆய்வில் 6.5 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு ரூ. 3750 அபராதமும் விதிக்கப்பட்டது.
அதிரையில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்த ஆய்வு தொடரும் என்றும், வியாபாரிகள் அரசின் உத்தரவை மதித்து பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் பேரூராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.