Home » மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை, பொதுமக்கள் அச்சம்…!

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை, பொதுமக்கள் அச்சம்…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களினால் பொதுமக்கள் அச்சம்.தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை.

பேருந்து நிலையம்,பள்ளிக்கூடங்கள்,பல தெரு பகுதிகளில் அதிகமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.இந்த நாய்களின் தோலில் ஒருவித காயங்கள் ஏற்பட்டு உள்ளது.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.மேலும் இந்த நாய்கள் பொதுமக்கள் நடந்து செல்லும்போதும்,வாகனங்களில் செல்லும்போதும் துரத்துகின்றன.இதனால் பெரும் சிரமத்திற்கும்,வாகன விபத்தையும் சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த ஃபாசில் அகமது தெரிவிக்கையில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதனால் நடமாடுவதற்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது, குறிப்பாக சொல்லப்போனால் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் நாய்களின் தொல்லையால் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர்.பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர், எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்னரே நாய்களை பிடிக்க மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter