79
அதிராம்பட்டினம் ரயில்வே நிலையம் பின்புறம் உப்பளம் செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக தமுமுகவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தமுமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் தமுமுகவினர் அந்த குறிப்பிட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.
இதில் சட்டவிரோதமாக விற்பதற்கு வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் சிக்கின. இதையடுத்து கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை தமுமுகவினர் அதிரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காந்தி ஜெயந்தி அன்று மதுப்பானக்கடைகள் விடுமுறை என்பதால், கள்ளச்சந்தையில் விற்பதற்கு அந்த பாட்டில்கள் வைப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.