Friday, March 29, 2024

குக்கரில் சமைப்பதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் – ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் அறிவுரை !

Share post:

Date:

- Advertisement -

குக்கரில் சமைத்து சாப்பிடுவதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக் கலாம் என அரசு ஸ்டான்லி மருத்துவ மனை டாக்டர் கே.கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

உலக இதய தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்து வமனையின் இதய இயல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. மருத்துவமனை டீன் ஆர்.சாந்திமலர் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் ஆர்எம்ஓ ரமேஷ், ஏஆர்எம்ஓ கீதா, இதய இயல் துறைத் தலைவர் டாக்டர் கே.கண்ணன், டாக்டர்கள் ஜி.மனோகர், சி.இளமாறன், மருத்து வம் மற்றும் செவிலிய மாணவ, மாணவியர், ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து ஊட்டச் சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் அறி வுரை வழங்கினார். பின்னர், பொது மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதய நோய் தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள் குறித்த கேள்விகளுக்கு டாக்டர்கள் விளக்கமாக பதில் அளித்தனர்.

இதய இயல் துறைத் தலைவர் டாக்டர் கே.கண்ணன் கூறியதாவது :

உலக இதய தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள் ‘எங்கள் இதயம் உங்கள் இதயம்’ என்பதாகும். இந்தியாவில் 1990-ம் ஆண்டு 4-வது இடத்தில் இருந்த இதய நோய்கள், தற்போது முதலிடத்தில் உள்ளன. இதேபோல், 18-வது இடத்தில் இருந்த சர்க்கரை நோய், 2-வது இடத்தில் உள்ளது. 100 பேரில் 11 பேர் இதய நோய்களாலும், 12 பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதய நோய்கள் அதிகரிக்க வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது. பொதுமக்கள் பாஸ்ட்ஃபுட் உணவுக்கு அடிமையாகி யுள்ளனர். ஏசி அறையில் வேலை. எங்கு சென்றாலும் கார் என்று வாழ்கிறோம். சத்துள்ள உணவு களை சாப்பிடுவதில்லை. உடற் பயிற்சி செய்வதில்லை. நடைபயிற்சி யில் ஈடுபடுவதில்லை. உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. உடல் பருமன் அதிகரித்துவிட்டது.

முன்பெல்லாம் 50 வயதுக்கு பிறகு தான் மாரடைப்பு வரத்தொடங்கியது. ஆனால், தற்போது 30 வயது இளைஞர்களுக்கே மாரடைப்பு வருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது. சாதாரண நபருக்கு ரத்தக் குழாயில் ஒரு அடைப்பு வந்தால், சர்க்கரை நோயாளிக்கு மூன்று அடைப்பு ஏற்படுகிறது. இதேபோல் இதயச் செயலிழப்பும் அதிகரித்து வருகிறது.

வாழ்க்கை முறை மாற்றத்தால்

பரம்பரையாக மரபணு பிரச்சினை யாலும் இதய நோய்கள் வருகின்றன. ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால்தான் 90 சதவீத இதய நோய்கள் ஏற்படுகின்றன. வாழ்க்கை முறை மாற்றத்தை சரிசெய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடி யும். அதற்கு முதல்கட்டமாக குக்கரில் அரிசி, பருப்பு, காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முன்பு எப்படி அரிசியை வேகவைத்து வடித்து சாப்பிட்டோமோ அப்படி சாப்பிட வேண்டும்.

இரவு நேரத்தில் சாதம் சாப்பிடு வதை தவிர்ப்பது நல்லது. மாரடைப்பு, ரத்தக்குழாய் மற்றும் இதய தசை களில் பிரச்சினை என இதய நோய் களில் பல இருக்கின்றன. இதய நோய்களின் முக்கிய அறிகுறிகளாக நெஞ்சுவலி, அதிகமாக மூச்சு வாங்கு வது, படபடப்பு, மயக்கம், கை, கால் களில் வீக்கம், உடல் சோர்வு போன் றவை உள்ளன. மாரடைப்புக்கு நெஞ்சு வலி, மூச்சு வாங்குதல் அறிகுறி களாகும். இவ்வாறு டாக்டர் கே.கண்ணன் தெரிவித்தார்.இந்தியாவில் 1990-ம் ஆண்டு 4-வது இடத்தில் இருந்த இதய நோய்கள், தற்போது முதலிடத்தில் உள்ளன. இதேபோல், 18-வது இடத்தில் இருந்த சர்க்கரை நோய், 2-வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...