வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மழை நீர் செல்லும் வாய்க்கால்களை ஜே.சி.பி. இயந்திரியம் மூலம் அதிரை பேரூராட்சி சார்பாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள அணைத்து தெருக்களிலும், முக்கியமான சாலைகளிலும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொடி மறுந்து,Bleching powder, சுண்ணாம்பு, கொசு மறுந்து அடிக்கும் இயந்திரம் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. நோய் பரவாமல் தடுக்க பேரூராட்சி ஊழியர்களும் தயார் நிலையியல் உள்ளனர்.
- இவை அனைத்து ஏற்பாடுகளையும், செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் செய்கின்றனர்.