Friday, September 13, 2024

‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்…’ – அசாம் பாஜக அரசின் சர்ச்சை உத்தரவு !

spot_imgspot_imgspot_imgspot_img

அசாம் மாநிலத்தில், பா.ஜ.க-வைச் சேர்ந்த சர்பானந்தா சோனோவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. இன்று, முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் அம்மாநிலத்தில் நடைபெற்றது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், `இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசாங்க வேலை இல்லை’ என்ற அதிரடி அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், புதிய நிலக் கொள்கை (New Land Policy) திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலமற்ற பூர்வகுடி மக்களுக்கு விவசாய நிலங்கள் மற்றும் வீடு கட்டுவதற்கான நிலங்களை வழங்க அந்தத் திட்டம் வழிவகுக்கிறது.

சிறிய குடும்ப விதிமுறையின்கீழ், 2021 ஜனவரி முதல் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பவர்களுக்கு அரசாங்கப் பணி கிடையாது என்று அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அசாம் சட்டப்பேரவையில் `அசாமின் மக்கள்தொகை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் கொள்கை’ (Population and Women Empowerment Policy of Assam) நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், இரண்டு குழந்தைகள் இருப்பவர்கள் மட்டுமே அரசாங்கப் பணிக்கு தகுதியுடையவர்கள். தற்போது, அரசு வேலைகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அசாமில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ‘புதிய நிலக் கொள்கை (New Land Policy) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிலமற்ற பூர்வகுடி மக்களுக்கு, குறிப்பிட்ட அளவு நிலம் வழங்கப்படும். அதேபோல நிலமற்ற ஏழைமக்களுக்கு வீடு கட்ட நிலம் வழங்கப்படும். அதை அவர்கள் 15 ஆண்டுகளுக்கு விற்க முடியாது’ என்று அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேருந்து கட்டணத்தை 25 சதவிகிதம் உயர்த்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – தஞ்சை மாவட்ட முஸ்லீம் லீக்...

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக திமுக கூட்டணி கட்சிகள்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது.இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் மது அருந்திவிட்டு வாகனம்...

தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளரை மிரட்டிய அதிரை கவுன்சிலர்..!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு நகர திமுக அலுவலகத்திற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் முரசொலி வருகைதந்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு முதன்முறையாக அலுவலகம்...
spot_imgspot_imgspot_imgspot_img