148
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி NSS அமைப்பின் சார்பில் அதிரையை அடுத்த மாளியக்காடு என்னும் கிராமம் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டது.
கடந்த 20ம் தேதி நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா கல்லூரி செயலர் தலைமையில் நடத்தப்பட்டு, கடந்த இரு நாட்களாக கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் பணிகள் நடைபெற்று வந்தன.
குறிப்பாக அந்த கிராமத்தில் NSS மாணவ, மாணவிகள் சார்பில் கிராமத்தை சுத்தம் செய்தல், சாலைப் பராமரிப்பு, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன.
மேலும் காதிர் முகைதீன் கல்லூரி NSS மாணவ, மாணவிகள் சார்பில் கிராமம் முழுவதும் 300 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
படங்கள் :