79
விக்கிறவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
அதனை கொண்டாடும் விதமாக அதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பேரூர் அதிமுக செயலாளர் பிச்சை தலைமையில் பேருந்து நிலையம் அருகே ஈசிஆர் சாலையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.