34
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரெயில்வே கேட்கீப்பர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதையில் பணிபுரிகின்ற மொபைல் கேட்கீப்பர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார்.செயலாளர் வ.விவேகானந்தம் தகவல் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஸ்ரீதர் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம்.கலியபெருமாள் செயற்குழு உறுப்பினர்கள் கே. செபஸ்தி வே.சுப்பிரமணி துணைசெயலாளர் பிரின்ஸ்விஜயகுமார் மற்றும் டி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.