Home » கேரள இடைத்தேர்தலில் மலராத தாமரை !

கேரள இடைத்தேர்தலில் மலராத தாமரை !

0 comment

கேரள சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பாஜக ஒரு தொகுதியில் மட்டும் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

கேரளாவில் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அரூர், மஞ்சேஷ்வர், கொன்னி, எர்ணாகுளம் மற்றும் வட்டியூர்காவு ஆகிய தொகுதிகளே அவை.

இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. 2 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கூட்டணியான இடதுசாரி கூட்டணி வெற்றிவாகை சூடியது.

மஞ்சேஷ்வர் தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு 2வது இடம் கிடைத்தது. ஆளும் இடதுசாரி கூட்டணி வட்டியூர்காவு மற்றும் கொன்னி தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. அதேசமயம், எர்ணாகுளம்,மஞ்சேஷ்வர் மற்றும் அரூர் தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது.

இதில் அரூர் தொகுதி தற்போது சிபிஎம் வசமிருந்த தொகுதியாகும். அதை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது கம்யூனிஸ்ட் கட்சியினரை அதிர வைத்துள்ளது. வட்டியூர்காவில் சிபிஎம் வேட்பாளர் வி.கே.பிரஷாந்த், அரூரில் காங்கிரஸ் வேட்பாளர் சனிமோல் உஸ்மான், மஞ்சேஷ்வரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் கமருதீன், எர்ணாகுளத்தில் காங்கிரஸ் கட்சியின் டிஜே வினோத், கொன்னி தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் ஜனீஷ் குமார் ஆகியோர் வெற்றியடைந்துள்ளனர்.

பாஜகவைப் பொறுத்தவரை கேரள சட்டசபைத் தேர்தலில் அவர்களுக்கு சந்தோஷப்பட எதுவும் இல்லை. வட்டியூர்காவு, கொன்னி, மஞ்சேஷ்வர் தொகுதிகளில் பாஜக சிறப்பான வாக்குகளை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மஞ்சேஷ்வரில் மட்டும் அக்கட்சிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. மற்ற தொகுதிகளில் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.

2021ல் கேரள சட்டசபைக்கு பொதுத் தேர்தல் வரவுள்ளது. பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இடைத்தேர்தலில் பாஜக பெற்ற முடிவுகளை பார்க்கும்போது, பொதுத்தேர்தலிலும் இந்த முடிவே எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter