45
தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டிணம் நகரத்தின் பல பகுதிகளில் SDPI கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் இன்று(26.10.2019) காலை 7 மணியளவில் வழங்கப்பட்டது.
மல்லிப்பட்டிணத்தின் முக்கிய பகுதிகளில் முகைதீன் ஜூம்ஆ பள்ளி,புதுமனைத்தெரு,வடக்குத் தெரு,இராமர் கோவில் தெரு,பிளாட் கே.ஆர்.காலணி போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது.இதில் பொதுமக்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வாங்கி சென்றனர்.இதன் மூலம் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.