Home » தன் மகனை மீட்க துணிப்பை தைத்துக் கொடுத்த தாயின் பாசப் போராட்டம் !

தன் மகனை மீட்க துணிப்பை தைத்துக் கொடுத்த தாயின் பாசப் போராட்டம் !

0 comment

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் நேற்று மாலை செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்க 16 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.

குழந்தை விழுந்த சமயத்தில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்த நிலையில் தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை தற்போது 71 அடி ஆழத்துக்கு சென்றிருப்பதாக தெரிகிறது.

குழந்தை மீது ஈரப்பதமான மண் சரிந்து விழுந்திருப்பதும், சிறுவன் அசைவற்று இருப்பதும் மீட்புக் குழுவினருக்கு மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

குழந்தையை உயிரோடு மீட்பதில் மீட்புக் குழுவினர் நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மீட்பு பணியில் ஈடுபட நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் விபத்துகளின் போது மீட்புப் பணிகளில் ஈடுபடும் மீட்புக் குழு விரைந்துள்ளது.

இதனிடையே மீட்புக் குழுவினர் குழந்தையை மீட்க ஒரு துணிப்பை தேவை என்று சொன்ன போது, தனது மகன் சுஜித்துக்காக அவரது தாயாரே கண்ணீரோடு அந்தப் பையை தைத்துக் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியானது.

தனது மகன் உயிரோடு மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையோடு அவர் பையைத் தைத்துக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கும் அனைவரும், சுஜித் மீண்டு வர வேண்டி பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

சிறுவன் சுஜித் மீண்டு வர வேண்டி சமூகவலைதளங்களில் #prayforsurjith #savesurjeet, ஆகிய ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியிருப்பதைப் பார்க்கும் போது நாடே சுஜித் உயிருடன் மீண்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பது தெரிகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter