137
கல்லணையில் திறந்து விடப்பட்ட காவிரி ஆற்று தண்ணீர், கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தடைந்தது.
சி.எம்.பி. வாய்க்கால் மூலம் வருகின்ற தண்ணீர், அதிரையில் உள்ள குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு குளங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றது.
அதன் ஒருபகுதியாக அதிரை செடியன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் முயற்சியில் மேலத்தெரு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சி.எம்.பி. வாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீரை, செடியன் குளத்திற்கு திருப்பி விட்டு செடியன் குளம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான முயற்சியை மேலத்தெரு TIYA சங்க நிர்வாகிகள், TIYA இளைஞர் சங்க நிர்வாகிகள், அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையினர் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.