குழந்தை சுஜித் உடல் நிலை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.
ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை இன்னும் 88 அடியிலேயே உள்ளது. குழந்தை தொடர்ந்து கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தவறுதலான நம்பிக்கையை ஊட்டக்கூடாது என கவனத்தில் இருக்கிறோம். குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதிலேயே கைவிடப்படாது. எந்தவிதத்திலும் முயற்சி கைவிடப்படாது.
வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தற்போது கூறியதாவது,
தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில் குழந்தையின் உடலில் துற்நாற்றம் வீசுவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
Source: Dailythanthi