இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதிர் முகைதீனின் மனைவி லத்திபா பேகம் இன்று திருச்சியில் காலமானார். அவருக்கு வயது 77.
வயதுமூப்பு காரணமாக திருச்சி உறையூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.
காதிர் முகைதீன் மனைவி காலமான செய்தி மதுரை விமான நிலையத்தில் இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு திருச்சி சென்று பேராசிரியர் காதிர் முகைதீனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பேராசிரியர் காதிர் முகைதீன் மனைவி லத்திபா பேகத்தின் ஜனாஸா நல்லடக்கம் நாளை(31/10/2019) பிற்பகல் செய்யப்படுகிறது.