Home » இதுவரை இன்று !

இதுவரை இன்று !

by Admin
0 comment
அதிரை எக்ஸ்பிரஸ்

# கெளவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : ஓசூரில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.

# சேலம் அருகே புதிய பேருந்து வழித்தடங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.

# வேலூர் ராணிப்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்து இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்டுள்ளார். முகுந்தராஜபுரம் ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்ட இருவரின் சடலம் குறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

# ராமாநாதபுரம் கமுதி அருகே சாயல்குடி பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விளை நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக மாணிக்கம், பச்சைமால் ஆகிய இன்றுவர் கைது செய்யப்பட்டனர்.

# சென்னை பல்கலைக்கழக பதிவாளராக பேராசிரியர் இராம.சீனுவாசன் பெறுப்பேற்பு

# கடலூர் கெடிலம் ஆற்றில் கம்மியம்பேட்டை தடுப்பணையில் மீன்கள் செத்து மிதக்கின்றது. நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலை கழிவுநீரால் மீன்கள் செத்து மிதப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

# தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க 36 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது சேதமடைந்த தடுப்புச்சுவரை பராமரிக்கும் பணி நடந்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

# தருமபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மின்சாரம் தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிளக்ஸ் போர்டுகளை அகற்றும்போது மின்சாரம் தாக்கியதில் நேற்று கணேசன் என்பவர் உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயம் அடைந்த முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் என்று உயிரிழந்துள்ளார்.

# குஜராத் தேர்தலுக்காக ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டி.

# புதுச்சேரி: குஜராத்தில் தேர்தல் வருவதால் ஜி.எஸ்.டி. வரியை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளது என்று சென்னையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். கச்சா எண்ணெய் ஒரு பேரல் 54 டாலராக குறைந்தாலும் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

# திருப்பூரில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை.

# டி.எம்.சி.காலனியைச் சேர்ந்த பாலன் என்பவர் தனது மனைவி கலைவாணி உடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மாநகராட்சியில் பணிபுரியும் இருவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

# கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த வழக்கில் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.

# 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 4 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட குழுவினருடன் சேர்ந்து ஹஜ் புனித பயணம் செல்ல அனுமதிக்க ஹஜ் கொள்கை சீராய்வு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

# பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாட்டை குறைக்க காஷ்மீரில் பணியாற்றும் மத்திய ரிசர்வ் போலீசாருக்கு பிளாஸ்டிக் தோட்டாக்கள் அனுப்பப்பட்டது.

# அவசர அவசரமாக அமல்படுத்திய சரக்கு, சேவை வரியால் 30 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

#அடுத்த ஆண்டு(2018) முதல் புனித ஹஜ் பயணத்துக்கு மானியத்தை ரத்து செய்யும் வரைவு பரிந்துரை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

#சவுதி அரேபியா அரண்மனையில் நடந்த தாக்குதலில் 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய கொலையாளி கொல்லப்பட்டான்.

# மத்திய அரசு நிதிஉதவி அளித்தால் பெட்ரோல் வரியை குறைக்க தயார்: கேரள நிதி மந்திரி பேட்டி

# இன்னும் 2 நாட்களில் இரட்டைஇலை சின்னம் நம்மை வந்து சேரும்: ஓ.பன்னீர் செல்வம் பேச்சு.

# இந்திய விமானப்படையின் 85-வது ஆண்டு தினம்: ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து.

# திரைப்படங்களால் பயங்கரவாதத்தை களைய முடியும்’: மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பேச்சு.

# சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய – சீன எல்லைப்பகுதியான நாது லாவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

# சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று கூறியுள்ள ஐகோர்ட்டு, நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

# அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா: செல்லூர் ராஜீ பேட்டி.

# மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா தான், நாங்கள் நன்றி மறக்கமாட்டோம் என்று மதுரையில் மருத்துவ முகாமை திறந்து வைத்த பின் அமைச்சர் செல்லூர் ராஜீ பேட்டி அளித்துள்ளார்.

# பிரதமாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி சொந்த ஊருக்கு சென்றார்.

# உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் ஆசிரியர் அறைந்ததால் ஐந்தாம் வகுப்பு மாணவனின் பார்வை பறிபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

# உத்தரபிரதேச மாநிலத்தில் சினிமா தியேட்டர்களுக்கு 100 சதவீத ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

# ஐஏஎஸ் பயிற்சி மையம் தொடங்க ரூ 2.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்.

# பாலமேட்டை சேர்ந்த கூலிதொழிலாளி வைரஸ் காய்ச்சலுக்கு பலி.

# கும்பக்கரை அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி.

# டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதகை அரசு மருத்துவமனையில் தட்டணுக்கள் செலுத்தும் வசதி: மாவட்ட மருத்துவப் பணிகள் துறையினர் தகவல்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter