97
அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடலோர பகுதியான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் முதல் விடிய விடிய பெய்த கனமழையால் நகர் முழுவதும் ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.
இன்று காலை 7 மணிவரை நிறைவடைந்த 24 மணி நேர அளவின்படி, அதிரையில் 6 செ.மீ(56.80 மிமீ) மழை பெய்துள்ளது.