Home » அதிரையில் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்… பேரூராட்சியில் ஜமாத்தார்கள் மனு !

அதிரையில் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்… பேரூராட்சியில் ஜமாத்தார்கள் மனு !

0 comment

அதிராம்பட்டினம் நகரில் கட்டுக்கடங்காத வகையில் நாய்கள் உலாவி வருகின்றன. இந்த நாய்கள் சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் பதம் பார்க்க துணிந்து விட்டன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலத்தெருவை சேர்ந்த முதியவர் ஒருவரை கடித்து குதரியது.

இதனை அடுத்து விழிப்படைந்த ஜமாத்தார்கள் அரசியல் கட்சியினர் பேரூராட்சி நிர்வாகத்தின் பார்வைக்கு மனு அளித்தனர் அந்த மனு மீதான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளாமல் அலட்சியம் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்,மேலத்தெரு ஜமாத்தார்கள்,கீழத்தெரு ஜமாத்தார்கள், கடற்கரை தெரு ஜமாத்தார்கள் என இன்று பேரூராட்சி அலுவலகம் சென்று செயல் அலுவலர் ரமேஷ் இடம் மனு அளித்தனர்.

அதில் அதிரை நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து வெளியேற்றுமாறு குறிப்பிட்டு உள்ளது.

முன்னதாக திமுக நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்தியன் ரெட்கிராஸ் சார்பாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஒரே கோரிக்கையை முன்வைத்து தனித்தனியே மூன்ரு மனுக்கள் அளித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter