அதிராம்பட்டினம் மேலத்தெரு 17வது வார்டை சேர்ந்த நூவண்ண (எ) நூர்முஹம்மது, அப்துல் பத்தாஹ் சேக்காதி, ஜபருல்லாஹ் அஸ்லம் ஆகியோர் நேற்று திமுக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அதிரை திமுக அலுவலகத்தில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், மரைக்கா இத்ரீஸ், முல்லை மதி, இராஜாமடம் இளங்கோ உள்ளிட்ட திமுகவினர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
புதிதாக இணைத்தவர்களுக்கு அதிரை பேரூர் திமுக சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.