Home » திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை… கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தமிழக பாஜக !

திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை… கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தமிழக பாஜக !

0 comment

தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.அங்கு இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றாார்.

அந்த விழாவில் திருக்குறளின் ‘தாய்’ மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார். இது பெரிய வரவேற்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழக பாஜக கட்சி இது தொடர்பாக வெளியிட்ட செய்தி டிவிட் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?, என்று பாஜக டிவிட் செய்து இருந்தது.

அதோடு, அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. பாஜகவின் இந்த டிவிட் பெரிய சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. திருவள்ளுவர் இத்தனை வருடங்கள் வெள்ளை உடையில் மட்டும்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழக பாஜக கட்சியின் கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு எதிராக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக திருவள்ளுவரை அவமானப்படுத்திவிட்டது. அவருக்கும் கூட மத சாயம் பூசிவிட்டது என்று குறிப்பிட்டு பலர் இணையத்தில் தமிழக பாஜகவிற்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter