Home » மல்லிப்பட்டிணம் மனோராவில் காவு வாங்க காத்திருக்கும் பள்ளம், உயிர்பலியை தவிர்க்க முன்வருமா அரசு…?

மல்லிப்பட்டிணம் மனோராவில் காவு வாங்க காத்திருக்கும் பள்ளம், உயிர்பலியை தவிர்க்க முன்வருமா அரசு…?

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே மனோராவில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மூடப்படாத பள்ளம்.

தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசதிப்பெற்ற சுற்றுலா தளம் மனோரா.இங்கு முறையான பராமரிப்பின்றி புதர்களும்,செடிகளும் மண்டி காணப்படுகிறது.இந்நிலையில் மனோராவிற்கு அருகே அமைந்துள்ள சுற்றுச்சுவருக்கு கீழே மிகப்பெரிய பள்ளம் இருக்கிறது.

இந்த பள்ளத்தில் சுற்றுலா பயணிகள் இடரி பள்ளத்தில் விழும் அபாயம் இருக்கிறது,மேலும் இங்கு அதிகமான சிறு குழந்தைகள் வந்தவண்ணம் இருக்கின்றன.ஆழமான பள்ளமாக இருப்பதால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.ஆகையால் உடனடியாக இதனை மூட வேண்டும் என்பது சுற்றுலாவாசிகள்,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.அண்மையில் கூட மணப்பாறையில் சுஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணறில் விழந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter