58
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் திடீர் ஆய்வு.
தடைசெய்யப்பட்ட இரட்டை மடி இழுப்பதாக குறிப்பிட்ட படகு மீது நாட்டுப்படகு சங்க தலைவர் ஜெயபால் வாட்ஸ்அப் வாயிலாக அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று(3.11.2019) இரவு அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.
புகார் தெரிவிக்கப்பட்ட படகு கடலுக்கே செல்லவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது, மேலும் பல விசைப் படகுகள் மீது பொய்யான புகாரை அதிகாரிகளுக்கு பரப்பிய விசைப் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஜெயபாலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பொய்யான புகாரை கொடுக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அதிகாரிகள் மத்தியில் புகார் அளித்தனர்.