தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் புகார் மனு.
அதிராம்பட்டினத்திற்கு வரவேண்டிய ஆற்று நீரை வரவிடாமல் சமூக விரோதிகள் சிலர் இரும்பு தடுப்புகளை கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனால் நீர் வராமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் நீர்நிலைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஸ்லம் தலைமையில் புகார் மனு அளித்தனர்.
நீர் வராமல் தடுக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.