71
அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நபிகளாரும் நாமும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேருந்து நிலையத்தில் வருகிற நவம்பர் 10 அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமையில் நடைபெறுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் முகமது அலி ஜின்னா,எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ரஃபீக் அகமது ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புறையாற்றுகின்றனர்.
இக்கூட்டத்தில் அனைத்து முஹல்லா ஜமாஅத்தார்கள்,பொதுமக்கள், இளைஞர்கள்,பெண்கள் என பலரும் கலந்துக் கொள்ள அதிராம்பட்டினம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.