அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் நில விவகாரத்தின் தீர்ப்பு இம்மாதம் இறுதிக்குள் வர இருப்பதையொட்டி கீழக்கரையில் அனைத்து ஜமாத் மற்றும் கட்சி இயக்கங்கள் இந்து அமைப்புகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு கீழக்கரை காவல் துறையால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருந்தாலும் அதை கொண்டாடவோ பட்டாசு வெடிக்கவோ ஊர்வலம் செல்லவோ தடை விதிக்கப்பட்டது.
மேலும் ,சமூக வலைத்தளங்களில் கவனமாக செயல்படவும் தீர்ப்பை உடனே விமர்சிக்கவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க அனைவரும் அமைதியாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஊர் நலன் நாடி காவல்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர் தங்களது சமூகத்திற்கும் இதை நாங்கள் கொண்டு செல்வோம் என உறுதி அளித்தனர்.