Home » தஞ்சை மாவட்டம் ECRபகுதிகளில் கால்நாடை மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த TNTJ புகார்..!

தஞ்சை மாவட்டம் ECRபகுதிகளில் கால்நாடை மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த TNTJ புகார்..!

by admin
0 comment

தஞ்சை மாவட்டம் ECR பகுதிகளான அதிராம்பட்டினம்,சேதுபாவசத்திரம்,புதுப்பட்டினம்,மல்லிப்பட்டினம் மற்றும் செந்தலைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் மாடுகள் கூட்டம் அதிகமாக நடமாடுவதால் வாகண விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி நடக்கிறது.மேலும் தெருநாய்கள் பெருக்கத்தின் தொல்லையால் குழந்தைகள்,

முதியவர்ள் நடமாட அச்சப்படுகின்றன.மழைக்கால நோய் ஏற்படாதவாறு பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமையில் அதிராம்பட்டினம் கிளை 1 மற்றும் கிளை 2 நிர்வாகிகள் பேரூராட்சி ஆணையரை சந்தித்தை புகார் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட துணை செயலாளர் ஆவணம் ரியாஸ் கூறுகையில்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
சேதுபாவாசத்திரம்,மல்லிப்பட்டினம்,புதுப்பட்டினம்,செந்தலைப்பட்டினம்,ஆவணம்,முடச்சிக்காடு,பேராவூரணி கிளை நிர்வாகிகள் பல நாட்களுக்கு முன் ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டும் கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாவட்ட அளவில் மக்களை திரட்டி நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter