Home » ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எப்போதுமே எங்கள் ஆதரவு உண்டு’ – காங்கிரஸ் !

‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எப்போதுமே எங்கள் ஆதரவு உண்டு’ – காங்கிரஸ் !

0 comment

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு வழங்கப்படுவதாக, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அயோத்தியில் மாற்று இடத்தில் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.

2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்பட்ட நிர்மோஹி அகாராவுக்கு, இதில் நிர்வாக உரிமைகூட இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

மசூதிக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கும், கோயில் அறக்கட்டளை அமைப்பதற்கும் மூன்று மாதங்களுக்குள் ஒரு திட்டத்தை வகுக்க நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதனிடையே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்கள் கட்சி ஆதரவாக இருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. அனைத்து கட்சிகளையும் சமூகங்களையும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுமாறும் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் செயற்குழு உறுப்பினருமான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது” என்றார்.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய தேசிய காங்கிரஸ் மதிக்கிறது. நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற விழுமியங்கள் மற்றும் சகோதரத்துவத்திற்கு, கட்டுப்பட்டு அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பல யுகங்களாக நம் சமுதாயம் வரையறுத்துள்ள அனைவருக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமை என்ற நமது பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இவ்வாறு காங்கிரஸ் கூறியுள்ளது.

Courtesy : one india tamil

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter