Sunday, July 20, 2025

‘அயோத்தி தீர்ப்பு கலக்கம் தருகிறது’ – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி !

spot_imgspot_imgspot_imgspot_img

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு தமது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் தாம் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

டெலிகிராஃப் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார்.

“அங்கு ஒரு மசூதி இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வந்துள்ளனர். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியலமைப்பின் மாணவனாக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்” என்று 72 வயதான கங்குலி கூறி உள்ளார்.

2ஜி வழக்கில் 2012ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய கங்குலியை அபோதைய பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கொண்டாடியது.

“1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபோது தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது.

தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மசூதி என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு – அது அரசமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார்? ஒரு மசூதி பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா? அரசமைப்பு வந்தபோது அங்கு ஒரு மசூதி இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா? ” என்று கேட்டுள்ளார்.

“அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். ” என்று கூறி உள்ளார்.

“அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது. அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை. பின்னர் ஒரு மசூதி இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இது போன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால், நிறைய கோயில்கள் மற்றும் மசூதிகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும்.

நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது. ராமன் யார்? வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா? இது நம்பிக்கை சார்ந்த விஷயம்” என்று கூறியுள்ளார்.

“நம்பிக்கையின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது. மசூதியின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மசூதி கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது ஒரு மசூதியை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?” என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா? நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மசூதி இருந்தது என்று நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஓர் உண்மை. அது வரலாற்று உண்மை அல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை.

அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஒரு மசூதியை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மசூதியை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழி நடத்துகிறீர்கள்? ஏன்? மசூதி இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்” என்றார்.

“நானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மசூதியை மீண்டும் கட்ட சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மசுதியும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன். நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன்.

வெவ்வேறு பகுதிகளில் ஒரு மசூதி அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது. அப்படித் தரவேண்டும் என்பது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை. இப்போது அவர்கள் எந்த மசூதியையோ, வேறு எதையுமோ இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று வந்தனர்; இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள். நான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும்பாலோர் இதை இப்படித் தெளிவாக சொல்லப்போவதில்லை ” என்று கூறியுள்ளார் நீதியரசர் கங்குலி.

நன்றி : டெலிகிராஃப்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img