Home » கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து !(வீடியோ)

கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து !(வீடியோ)

0 comment

தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதிய பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

நேற்று தெலுங்கானாவில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்தது. தென்னிந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான ரயில்நிலையங்களில் கச்சிகுடா ரயில்நிலையம் ஒன்று. திருச்சி ஜங்ஷனுக்கு இணையான வரலாற்றை கச்சிகுடா நிலையம் கொண்டுள்ளது.

கோவையில் இருந்து டெல்லி செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் கச்சிகுடா ரயில் நிலையில் 15 நிமிடம் நின்றுவிட்டுதான் செல்லும். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

அங்கு பிளாட் பார்ம் எண் 3ல் கொங்கு விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர் திசையில் தவறுதலாக வந்த புறநகர் மின்சார ரயில், விரைவு ரயில் மீது வேகமாக மோதியது. இரண்டு ரயிலும் இதில் மோசமாக சேதம் அடைந்தது. மின்சார ரயில் தடம் புரண்டது.

இதையடுத்து துரிதமாக நேற்று மீட்பு பணிகள் நடந்தது. இரண்டு ரயிலில் இருக்கும் பயணிகளையும் மீட்கும் பணி வேகமாக நடந்தது. மின்சார ரயிலின் ஓட்டுனரை மீட்க மட்டுமே 6 மணி நேரம் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து எப்படி நடந்தது என்று அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இரண்டு ரயிலும் மோதுவது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது. ரயில்கள் விபத்துக்குள்ளானது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பயணிகளை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் காயம் அடைந்த ஓட்டுனரின் உடல்நிலை மட்டும் மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ :

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter