58
பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் இன்று மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கவும், பாதுகாப்பு ஏற்பாடாகவும் அதிராம்பட்டினத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.