Home » டெல்டா மாவட்டத்தில் மீத்தேனுக்கு “குட்-பை” .. விவசாயிகள் மகிழ்ச்சி..!

டெல்டா மாவட்டத்தில் மீத்தேனுக்கு “குட்-பை” .. விவசாயிகள் மகிழ்ச்சி..!

by
0 comment

தமிழகத்திலுள்ள காவிரி டெல்டாமாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அறிவித்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம்,அதற்கான ஆய்வுப்பணிகளில் சில மாதங்களுக்கு முன்னர் ஈடுபட்டது.இதற்காக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பல அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்பட்டன.

இந்நிலையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால்,காவிரி டெல்டா பகுதிகள் பாலவனைமாகும் எனக் கூறி அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தது மட்டுமின்றி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன.இதனை தொடர்ந்து தமிழக அரசு மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு தடை விதித்தது.மேலும் மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி மத்திய பெட்ரோலியத் துறைக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.ஆனால் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது.

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,”விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால்,காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக முடிவெடுத்துள்ளோம்.மேலும் தமிழகத்தில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் ஏதுமில்லை.தமிழகத்தில் கெய்ல் எரிவாயுக் குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.தமிழகத்தைப் போல ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள அரசு,தற்போது குழாய் பதிக்கும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.அதைப் போல தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பால்,தங்களின் வாழ்வாதாரமாக இருந்த காவிரி டெல்டா விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter